இந்திய தொடர் அடையாளப்படுத்திக் கொடுத்த நான்கு இளம் வீரர்கள் பயிற்சியாளர்கள் ஆதர் பெருமிதம் …!

இந்திய தொடர் அடையாளப்படுத்திக் கொடுத்த நான்கு இளம் வீரர்கள் பயிற்சியாளர்கள் பெருமிதம் …!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

மூன்றாவது போட்டியில் இலங்கை அணி மிகச் சிறப்பாக மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை தனதாக்கியது.

இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-1 என்று கைப்பற்றினாலும் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை வீரர்களின் திறமை வெளிப்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தன .

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆதர் இந்த தொடர் குறித்து தன்னுடைய நம்பிக்கையையும் பெருமிதத்தையும் வெளியிட்டுள்ளார் .

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான தொடரின்போது நான்கு இளம் வீரர்கள் நம்பிக்கை தரும் விதத்தில் செயற்பட்டதான கருத்து அவரிடம் இருந்து வந்துள்ளது.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன அதுமாத்திரமல்லாமல் துஷ்மந்த சமீர இந்த 4 வீரர்களும் மிகச்சிறந்த வகையில் திறமையை வெளிப்படுத்தி எதிர்கால இலங்கை நட்சத்திரங்களாக தங்களை அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர் எனும் கருத்தை மிக்கி ஆதர் தெரிவித்துள்ளார்.