இந்திய தொடர் -பானுக்கவுக்கு புதிய சிக்கல்…!

இந்திய தொடரில் இருந்து பானுகா ராஜபக்சவை நீக்க SLC கடைசி நிமிட முடிவை எடுத்துள்ளது?

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்யும் டி20 அணியில் இருந்து அதிரடி வீர்ர் பானுக ராஜபக்சவை நீக்குவதற்கான கடைசி நிமிட முடிவை எடுக்க இலங்கை கிரிக்கெட் (SLC) தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் 2KM உடற்தகுதிப் பரீட்சையில் பானுக ராஜபக்ச சித்தியடைந்த போதிலும், அதற்குத் தேவையான ஸ்கின்ஃபோல்ட் அளவை அவர் இன்னும் அடையவில்லை என்பதால், அவரை அழைத்துச் செல்வதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய டி20 தொடரின் காரணமாக பானுக ராஜபக்ச பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதை இந்த வார தொடக்கத்தில் தவிர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2022 ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரே இலங்கை துடுப்பாட்ட வீர்ர் பானுக ராஜபக்ச, அவர் 50 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸால் அழைக்கப்பட்டார். மற்றைய 4 பந்துவீச்சாளர்கள்.

இந்திய தொடருக்கான டி20 அணியை இலங்கை கிரிக்கெட் இன்னும் அறிவிக்கவில்லை.

வரும் 24 ம் திகதி இந்திய, இலங்கை அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஆரம்பிக்கவுள்ளது.