இந்திய தொடர் முழுவதையும் தவறவிடும் இங்கிலாந்தின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் -அதிர்ச்சி தகவலை வெளியிட்டது ECB..!

இந்திய தொடர் முழுவதையும் தவறவிடும் இங்கிலாந்தின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் -அதிர்ச்சி தகவலை வெளியிட்டது ECB..!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகின்றது.

12ஆம் திகதி நாளை 2-வது டெஸ்ட் போட்டி லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பிரோட் உபாதை காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிந்திக் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீதமான 4 ஆட்டங்களிலும் அவரால் விளையாட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி அற்று (Draw) நிறைவுக்கு வந்த காரணத்தால் அடுத்த நான்கு போட்டிகளும் தொடரின் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இப்படியான நிலையில் பிரோட்டின் உபாதை இங்கிலாந்து அணிக்கு பலத்த நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.