இந்திய பந்துவீச்சாளர்கள் மீது ஜோ ரூட்டின் அளவு கடந்த காதல் -முழுமையான விபரம்.

இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர் ஜோ ரூட் இந்திய அணி மீதான காதல்..

இங்கிலாந்து அணி தலைவர் ரூட் இன்றுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 ஆவது சதத்தை கடந்துள்ளார். இந்த தொடரில் 3 ஆவது சதம் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சதம் என்ற கணக்கில் தனது ஓட்ட கணக்கை அதிகரித்து வருகிறார்.

இன்றைய சதத்துடன் 8 ஆவது சதம் இந்திய அணிக்கு எதிராக பெற்றுள்ளார் என்பது அவர் இந்திய அணி மீது கொண்ட காதலின் வெளிப்பாடே அது.

இந்த காதல் கதை 2014 ஜூலை மாதம் ஆரம்பமானது ,ரென்ட் பிரிட்ஜில்  இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காது 154 ஓட்டம் அந்த தொடரின் முதல் போட்டி அது,

இரண்டாவது 15 ஆகஸ்ட் 2014 இல்  ஓவல் மைதானத்தில் ஆட்டம் இழக்காது 149 ஓட்டங்கள்.

மூன்றாவது 9 நவம்பர் 2016 இல் இங்கிலாந்தில் மட்டுமில்லை இந்தியாவிலும் காதல் காவியம் தொடங்கும் என்று இந்திய Saurashtra Cricket Association மைதானத்தில் 5 போட்டிகள் தொடரில் முதல் போட்டியில் முதல் இன்னிங்க்ஸ் இல் 124 ஓட்டம் பெற்றார்

நான்காவது 7 செப்டம்பர் 2018 இல் மீண்டும் ஓவல் மைதானத்தில் 125 ஓட்டங்கள்.

ஐந்தாவது 5 பெப்ரவரி 2021 இல் சென்னை சிதம்பரம் மைதானத்தில் 218 ஓட்டங்களை பெற்றார்.

அதன் பின் ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது சதங்களை இந்த தொடரில் பெற்றுக்கொண்டார்.
ஆறாவது 4 ஆகஸ்ட் ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் 109 ஓட்டங்களையும்
ஏழாவது 12 ஆகஸ்ட் லோர்ட்ஸ் மைதானத்தில் 180 ஓட்டங்களும் ,எட்டாவது தற்போது இடம்பெறும் ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் 121 ஓட்டங்களும் பெற்றார்

இந்த காதல் கதை முற்றுபெறது தொடர் கதையாக செல்லும் என நம்பப்படுகிறது.

ரூட் சொந்த நாட்டு மைதானத்தில்  சமீபகாலமாக பிரகாசிக்க தவறிவிட்டார் என்ற ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தது, இந்த தொடருடன் அந்த கதைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மைதானங்களில் இன்றைய போட்டி இடம்பெறும் Headingley, Leeds மைதானத்தில் அவரது குறைந்த சராசரி இருந்ததும் குறிப்பிடத்தக்கது..

#சந்துரு வரதராசன்