இந்திய பந்துவீச்சுப் படை குறித்து பாராட்டும் இன்சமாம்…!

உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சை கொண்ட அணி இந்திய அணி தான் இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக் இந்திய அணியிடம் தற்போது மிக சிறந்த பந்துவீச்சு உள்ளதாக பாராட்டியுள்ளார்.

தற்பொழுது உள்ள இந்திய டெஸ்ட் அணியில் பும்ரா, ஷமி, சிராஜ் மற்றும் இஷாந்த் ஷர்மா என மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் இந்திய அணியில் இருந்த மிக சிறந்த பந்துவீச்சு தற்போது உள்ளது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்சில் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் மிகச் சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ஜோ ரூட் சதமடித்து மிகப்பெரிய தூக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் இறுதிவரை அதை அதிரடி ஆட்டத்தை இங்கிலாந்து அணியால் தொடர முடியவில்லை. குறிப்பாக பும்ரா இரண்டாவது இன்னிங்சில் மிக சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

அவருக்கு இணையாக மற்றய வேகப்பந்து வீச்சாளர்களும் மிக சிறப்பாக செயல்படுவதாகவும், தற்பொழுது உள்ள இந்திய அணி எந்த அணியையும் மிக எளிதில் தனது அபாரமான பந்து வீச்சு மூலமாக திணறடிக்க கூடிய ஆற்றல் உடையது என்று இன்சமாம் உல் ஹக் இறுதியாக கூறி முடித்தார்.