இந்திய, பாகிஸ்தான் அணிகளது T20 உலக கிண்ணம் – வெற்றி யாருக்கு , வாக்கர் யூனுஸ் கருத்து.

இந்திய, பாகிஸ்தான் அணிகளது T20 உலக கிண்ணம் – வெற்றி யாருக்கு , வாக்கர் யூனுஸ் கருத்து.

T20 உலக கிண்ண போட்டிகளில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் முக்கிய போட்டியான இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த போட்டியில் யார் வெற்றிபெற போகிறார்கள் என இரு நாட்டு ரசிகர்களும் பலத்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான வாக்கர் யூனுஸ் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

சந்தேகத்துக்கு இடமின்றி பாகிஸ்தான் அணி இம்முறை இந்தியாவை தோற்கடிக்கும் என அவர் தெரிவித்தார்.

உலக கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் அணி ,இந்தியாவை தோற்கடித்த வரலாறுகள் எதுவும் இல்லை என்பதுடன் T20 உலக கிண்ண போட்டிகள் வரலாற்றில் 5-0 என இந்தியாவே ஆதிக்கம் செலுத்துகின்றது.

இந்தநிலையில் ஒக்டோபர் 24 இடம்பெறவுள்ள இந்த போட்டிகளில் இந்தியாவை, பாக்சிதான் தோற்கடிக்கும் என வக்கார் யூனுஸ் தெரிவித்துள்ளார்.