இந்திய மகளிர் வசமான இளையோர் உலக கிண்ணம்..!

இந்திய மகளிர் வசமான இளையோர் உலக கிண்ணம்..!

தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற இளையோருக்கான மகளிர் உலக கிண்ண T20 போட்டியில் இந்திய மகளர் அணி சாம்பியன் மகுடம் சூடியது.

இப்போட்டியின் டாஸ் வென்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை அழைத்தது.

இங்கிலாந்து மகளிர் அணியால் 68 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ரியானா மெக்டொனால்டு-கே 19 ரன்களும், டைட்டாஸ் சாது, அர்ச்சனா, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்த களம் இறங்கிய இந்திய மகளிர் அணி 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் சௌமியா திவாரி 24 ரன்களும், ஜி திரிஷா 24 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் இந்தியா இளையோருக்கான மகளர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.

ஏற்கனவே இந்திய மகளிர் அணி 5 தடவைகள் இளையோர் உலக கிண்ணம் வெற்றிகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.