இந்திய மத்திய வரிசை போன்று பாகிஸ்தான் மத்திய வரிசை வீரர்களும் தடுமாற்றத்தில்- இருபது-20 உலக கிண்ணத் தேர்வு குறித்து விசனம்..!

இந்திய மத்திய வரிசை போன்று பாகிஸ்தான் மத்திய வரிசை வீரர்களும் தடுமாற்றத்தில்- இருபது-20 உலக கிண்ணத் தேர்வு குறித்து விசனம்..!

14வது ஐபிஎல் போட்டி தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் கட்டப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன .

இந்த போட்டிகளில் இந்தியாவின் உலகக்கிண்ண அணியில் இடம் பெற்றிருக்கும் மும்பை வீரர்களாக சூரியகுமார் யாதவ் , இஷான் கிஷன்  அதேபோன்று ஹர்திக் பாண்டியா ஆகிய வீரர்கள் தொடர்ந்தும் துடுப்பாட்டத்தில் ஏமாற்றி வருகின்றனர்.

இதனால் இந்தியாவின் மத்திய வரிசையில் பலமற்று இருப்பதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உள்ளூரிலேயே T20 தொடர் ஒன்றை நடத்தி வருகிறது ,பாகிஸ்தானிய வீரர்கள் மட்டும் பங்கேற்றுவரும் இந்த டுவென்டி 20 தொடரில் பாகிஸ்தானின் மத்திய வரிசை வீரர்களும் துடுப்பாட்டத்தில் சொதப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சோஹைப் மக்சூத்: 18, 0, 24 (42 ஓட்டங்கள்)
குஷ்டில் ஷா: 21, 24, 6 (51 ஓட்டங்கள்)
அஸாம் கான்: 20, 14, 1 (35 ஓட்டங்கள்)

மேற்குறித்த மூன்று வீரர்களும்  பாகிஸ்தான் மத்திய வரிசை வீரர்களாக உலகக் கிண்ணத்துக்கான அணியில் உள்வாங்கப்பட்டவர்கள் ,ஆகவே இவர்கள் இவ்வாறு பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என கேள்வி எழுந்துள்ளது.

24ஆம் திகதி இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் உலக கிண்ணத்தினுடைய முக்கியமான ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇஷன் கிஷனை தேற்றி ஆறுதல்படுத்திய கோலி- வைரலாகும் வீடியோ …!
Next articleகொல்கத்தா அணியின் முக்கிய சுழல்பந்து வீச்சாளருக்கு உபாதை- தொடரிலிருந்து விலகல்..!