இந்திய லெஜண்ட்ஸ் அணி அபார வெற்றி …!

இந்திய லெஜண்ட்ஸ் அணி அபார வெற்றி …!

இந்தியாவின் ராய்ப்பூரில் நேற்று ஆரம்பமான வீதி பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக இடம்பெறும் Road Safety T20 தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது .

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் வீரேந்தர் சேவாக் ஆகியோர் துடுப்பெடுத்தாட ஆடுகளும் புகுந்தனர் .

இருவரும் ஆரம்ப விக்கெட்டுக்கு 110 ஓட்டங்கள் இணைப்பாட்டம் புரிந்து இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு இலகுவான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர் .

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு தடவை சேவாக் வானவேடிக்கை நிகழ்த்தினார் .

வயது ஏறினாலும் தன் ஆற்றல் குறையவில்லை என்பதை நேற்றும் நிரூபித்தார் 35 பந்துகளில் 6 சிக்சர்கள் அடங்கலாக 80 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும் .

இந்திய லெஜண்ட்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கிட்டியது.