இந்திய வீரர்களுக்கான ஒப்பந்த சம்பள பட்டியல் வெளியானது..! நடராஜனுக்கு என்னவானது ?

இந்திய கிரிக்கெட் சபை வீரர்களின் திறமைகளின் அடிப்படையில் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த பட்டியலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

4 பிரிவுகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர், A+, A,B,C என்று நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

A+, A, B, C குறித்த பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டவர்களுக்கான சம்பளமாக முறையே 7 கோடி, 5 கோடி, 3 கோடி, 1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சம்பளம் பெறும் 7 கோடிக்கான A+ பிரிவில் அணித்தலைவர் கோஹ்லி, ரோஹித் சர்மா, பூம்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

5 கோடி சம்பளம் பெறும் A பிரிவில்
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
புஜாரா
அஜிங்க்ய ரஹானே
ஷிகர் தவான்
K L ராகுல்
மொஹமட் சாமி
இஷாந்த் சர்மா
ரிஷாப் பான்ட்
ஹர்டிக் பாண்டிய ஆகிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3 கோடி சம்பளம் பெறும் B பிரிவில்
வ்ரித்திமான் சஹா
உமேஷ் யாதவ்
புவனேஸ்வர் குமார்
ஷர்துல் தாகூர்
மாயங் அகர்வால் ஆகிய 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

1 கோடி சம்பளம் பெறும் Cபிரிவில்
குல்தீப் யாதவ்
நவதீப் சைனி
தீபக் சஹர்
ஷுப்மான் கில்
ஹனுமா விஹாரி
அக்சார் பட்டேல்
ஷ்ரேயஸ் ஐயர்
வாஷிங்டன் சுந்தர்
யுஸ்வேந்திரா சஹால்
மொஹமட் சிராஜ் ஆகிய 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆயினும் தமிழக வீரர் நடராஜன் இந்த குழுக்களில் உள்வாங்கப்படவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் சஹா B பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் சிரேயாஸ் அய்யர் C பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

குறித்த 28 வீரர்களுக்கான ஒப்பந்த காலம் அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.