இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய விபரம்..!

இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய விபரம்..!

 இந்த ஆண்டிலேயே அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இரண்டு பாகிஸ்தான் வீரர்களும், இரண்டு இந்தியர்களும் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டில் அதிகமான விக்கெட்டுகளான 38 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதே போன்று இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் படேல் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி 5 வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வீரர்கள் இருவர் இந்த பட்டியலில் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்.

நேற்று நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷஹீன் ஷா அஃப்ரிடி இந்த ஆண்டிலேயே 33 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

30 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹசன் அலி மூன்றாவது இடத்தில் இருக்கும் அதேநேரம் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜக் லீச் (28) நான்காவது இடத்திலும் அக்ஷர் பட்டேல் (27) 5வது இடத்திலும் காணப்படுகின்றனர்.