இந்த ஆண்டில் 1000 ஓட்டங்களை பெற்றவர்கள் விபரம், ஜோ ரூட் முதலிடம் இரண்டு பாகிஸ்தானிய வீரர்கள் பட்டியலில்..!
இந்த ஆண்டில் அனைத்து வகையான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி அதிகமான ஓட்டங்களை பெற்றுக் கொண்டு வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டுவென்டி டுவென்டி போட்டிகள் ஆகிய மூன்று வகையான போட்டிகளிலும் பங்கெடுத்து ஒட்டுமொத்தத்தில் ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொண்டவர்கள் வரிசையில் இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் முதல் இடத்தில் காணப்படுகிறார்.
இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வாானும், மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் காணப்படுகின்றனர் .
இவர்களை தொடர்ந்து நியூசிலாந்து வீரர் டெவோன் கொன்வே, பங்களாதேஷ் அணித் தலைவர் தமிம் இக்பால் ஆகியோரும் முதல் ஐந்து இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஐந்து வீர்ர்களும் இந்த ஆண்டில் இடம்பெற்ற அனைத்து வகையான போட்டிகளிலும் ஓட்டமழை பொழிந்து வருகின்றமை கவனிக்கத்தக்கது.