இனவெறிக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் கருத்து

இனவெறிக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் குரல் எழுப்பியுள்ளது. நேற்றைய போட்டியை அடுத்து சமூக வலைத்தளம் ஊடாக வீரர்கள் மீது இனவெறி சார்ந்த கருத்துக்கள் வெளிபடுத்தபட்டமை குறித்து மான்செஸ்டர் யுனைடெட் கழகம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இனவெறிக்கு எதிரான ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன் தமது சமூக வலைத்தள பக்கங்களிலும் கறுப்பு வெள்ளை நிறங்களை பயன்படுத்தி இனவெறிக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள செபீல்ட் யுனைடெட் அணியுடன் தோல்வியுற்று 13 போட்டிகள் தோல்வி இல்லமால் பயணித்த போட்டி கணக்கை முடித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.