சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்துகின்ற இருபதுக்கு-20 போட்டிகளுக்கான உலகக்கிண்ண போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இடம்பெறும் என்று முன்னர் திட்டமிடப்பட்டது.
ஆயினும் இந்தியாவில் காணப்படும் அதீத கொரோனா தொற்றுக் காரணமாக போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த மாத இறுதி வரை இந்திய கிரிக்கெட் சபைக்கு காலக்கெடு கொடுத்திருந்தது. இந்திய கிரிக்கெட் சபையின் தகவல்களின் பிரகாரம் இந்த போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகிறது.
அக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் இடம்பெறும் என்று அறியவருகிறது.
இருப்பினும் இந்திய கிரிக்கட் சபை இதனை உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தப்படுத்தவில்லையாயினும் கூட உள்ளகத் தகவல்கள் இதனையே தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 20- 20 உலக கிண்ண போட்டிகள் இடம்பெறுமாக இருந்தால் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில், இந்த போட்டிகள் இன்னொரு நாட்டுக்கு மாற்றப்படுகின்றமை இந்தியாவிற்கு நெருக்கடியாக அமையவுள்ளது.
இந்திய அணிக்கும் விராட் கோலி தலைமையிலான அணியிினருக்கும் உலகக்கிண்ணம் என்பது மீண்டும் கனவான ஒரு கதையாகவே இருக்கப் போகிறதா என்று ரசிகர்கள் கவலைப்படுகின்றனர்.