இன்னுமொரு நாள் இன்னுமொரு சதம் -அதிரடியில் கலக்கும் புஜாரா…!

இன்னுமொரு நாள் இன்னுமொரு சதம் -அதிரடியில் கலக்கும் புஜாரா…!

சசெக்ஸ் அணிக்காக சேட்டேஷ்வர் புஜாரா 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார்.

ஆகஸ்ட் 14, ஞாயிற்றுக்கிழமை ரோயல் லண்டன் கோப்பையில் இந்தியாவின் செஸ்டேஷ்வர் புஜாரா மீண்டும் தனது புதிய, தாக்குதல் அவதாரத்தை காண்பித்தார்.

புஜாரா, சசெக்ஸ் அணிக்காக விளையாடிய இரண்டு ஆட்டங்களில் தனது இரண்டாவது சதத்தை நேற்று அடித்தார். புஜாராவின் கடைசி சதம், 79 பந்துகளில் 107 ரன்கள் எடுத்ததாகும்.

ஆரம்பத்தில் சாதாரண வேகத்தில் சென்ற புஜாரா சத்த்தை தொட்டதன் பின்னர் அடுத்த 74 ரன்களை வெறும் 31 பந்துகளில் எடுத்தார். 35வது ஓவர் முடிந்ததும், புஜாரா, சசெக்ஸின் மற்றொரு சதம் அடித்த டாம் கிளார்க்குடன் சேர்ந்து தாக்குதல் முறையில் ஆடினார். இருவரும் இணைந்து 205 ரன்களை சேர்த்தனர்.

புஜாரா மீண்டும் தனது விதவிதமான அனைத்து ஷாட்களையும் காட்டினார், பந்துகளை கட்டிங் மற்றும் புல்லிங் செய்தார், மேலும் சில சமயங்களில் பந்தை ஷார்ட் ஃபைன் லெக்கில் அனுப்பினார், இந்திய ரசிகர்கள் அவரிடமிருந்து தேசிய சீருடையில் பார்க்காத ஷாட் எல்லாம் புஜாரா காண்பித்தார்.

புஜாரா தனது இன்னிங்ஸின் போது 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை உள்ளடக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.