இன்னுமொரு வெளிநாட்டு பிரிமியர் லீக்கில் இணையவுள்ள சாமரி அதபத்து..!

சாமரி அதபத்து, முதல்முறையாக பெண்கள் CPL போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் முக்கிய வெளிநாட்டு வீராங்கனையாக இணைக்கப்பட்டுள்ளார்.

மகளிர் கரீபியன் பிரீமியர் லீக்கின் முதல் பதிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. முதற்கட்ட போட்டியாக இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணித்தலைவி சாமரி அதபத்து இணைய உள்ளார் மேலும் அவர் ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

அந்த அணியின் முக்கிய வெளிநாட்டு வீராங்கனையான சாமரி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே வீரரும் கூட. Kia Super League, Women’s Big Bash League, Women IPL மற்றும் FairBreak Invitational போன்ற ஒவ்வொரு மகளிர் T20 லீக்கையும் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே இலங்கை வீராங்கனை இவராவார்.

இந்தப் போட்டி ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்க உள்ளது.