இன்று ஆரம்பிக்கிறது கரீபியன் பிரீமியர் லீக் – முழுமையான விபரம்.

வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் பிரபல டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக் 9வது முறையாக இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது, மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முன்னதாக வரும் செப்டம்பர் 19ல் துவங்கும் எஞ்சிய 2021 ஐபிஎல் தொடர் சிரமமின்றி நடைபெறுவதற்காக இந்த தொடரின் அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

6 அணிகள் : ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், பார்படாஸ் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், ஜமைக்கா தளவாக்ஸ், செயின்ட் கிட்ஸ் – நெவிஸ் பட்ரியொட்ஸ் ஆகிய 6 அணிகளும் இந்த முறை சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சுற்று விவரம் : இந்த தொடரின் லீக் சுற்றில் இடம்பிடித்துள்ள 6 அணிகளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

அதில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

அரை இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள் வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக மோத உள்ளன.

மாற்றங்கள் : இம்முறை நைட் ரைடர்ஸ் அணியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற நட்சத்திர வீரர் ட்வைன் பிராவோ செயின்ட் கிட்ஸ் அணிக்காக விளையாட உள்ளார், அதேபோல் மற்றொரு நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் அதே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

செயின்ட் லூசியா கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டேரன் சம்மி ஓய்வு பெற்று உள்ளதால் அவருக்கு பதில் தென் ஆப்பிரிக்காவின் பாப் டு பிளசிஸ் கேப்டனாக செயல்பட உள்ளார்.

முதல் போட்டி : இன்று துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் ஆகிய அணிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

எங்கே நடைபெறுகிறது : இந்தத் தொடரின் முதல் போட்டி முதல் இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளும் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பட்ரியொட்ஸ் நகரில் இருக்கும் வார்னர் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இங்கு இந்திய நேரப்படி இரவு 7.30,  12.00, அதிகாலை 4.30 ஆகிய நேரங்களில் அந்தந்த நாட்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

முழு அட்டவணை :

6 அணிகள் விவரம் :

எதில் பார்க்கலாம் :

இந்த போட்டிகளைப் பார்க்க 50% ரசிகர்கள் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் பேன் கோட் ஆகிய மொபைல் ஆப்கள் வாயிலாகவும் நேரடியாக கண்டு களிக்கலாம்.