இப்படியுமா களத்தடுப்பு அமைப்பது ? இங்கிலாந்தை துவம்சம் செய்த களத்தடுப்பு வியூகம்- வைரல் வீடியோ…!

இப்படியுமா களத்தடுப்பு அமைப்பது ? இங்கிலாந்தை துவம்சம் செய்த களத்தடுப்பு வியூகம்- வைரல் வீடியோ…!

ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி தொடரில் பின்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் ஒரு வித்தியாசமான களத்தடுப்பாட்டம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் பின்லாந்து அணிகள் மோதிய ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு மிகச்சிறந்த களத்தடுப்பு வியூகத்தை பின்லாந்து அமைந்தமை ஆச்சரியமாக இருந்தது.

பின்லாந்து அணியின் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசிய போது 8 வீரர்கள் ஸ்லிப் திசையில் அடுக்காக களத்தடுப்பில் ஈடுபட்டனர், அத்தோடு லெக் ஸ்லிப் திசையில் ஒருவர் அடங்கலாக மொத்தத்தில் 10 வீரர்கள் வரிசையாக களத்தடுப்பில் ஈடுபட்டமை
எல்லோருக்கும் ஆச்சரியமான விடயமாகும்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 114 ஓட்டங்களை பெற்றுகொண்டது, பதிலளித்து துடுப்பெடுத்தாடிய பின்லாந்து 99 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

வீடியோ இணைப்பு