இப்படியும் ஒரு விளையாட்டு துறை அமைச்சரா_ அணிக்குள் வீரராக நுழைந்த விளையாட்டுத்துறை அமைச்சர்..!

இப்படியும் ஒரு விளையாட்டு துறை அமைச்சரா_ அணிக்குள் வீரராக நுழைந்த விளையாட்டுத்துறை அமைச்சர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்கார்ரும் தற்போதைய பெங்கல் மாநிலத்தின் விளையாட்டு துறை அமைச்சருமான மனோஜ் திவாரி வித்தியாசமான காரியம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

 

அண்மையில் மம்தா பானர்ஜி தலைமையிலான பெங்கல் மாநில அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக 39 வயதான மனோஜ் திவாரி நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு பெங்கல் ரஞ்சி அணியில் மனோஜ் திவாரி கிரிக்கெட் அணியில் விளையாடி இருந்தார், இப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் மனோஜ் திவாரி 39வது வயதில் மீண்டும் கிரிக்கெட் அணிக்கு விளையாடும் முனைப்புக்களை மேற்கொண்டிருக்கிறார்.

உத்தேச உடற்தகுதி முகாமுக்கு பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் வீரர்கள் பட்டியலில் விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் திவாரியின் பெயரும் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக மோசமான பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், இந்த மாதிரியான ஒரு நிலைமையை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் எடுத்தால் என்ன எனும் கேள்விகள் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாக வர ஆரம்பித்திருக்கிறது.

எது எவ்வாறாயினும் மனோஜ் திவாரி ஒரு வித்தியாசமான விளையாட்டுத்துறை அமைச்சராக எல்லோராலும் கொண்டாடப்படுகின்றார்.