இப்படியும் யாரும் ஃபீல்டிங் செட் பண்ணுவார்களா- இங்கிலாந்தில் வைரலாகும் புகைப்படம்..!

இப்படியும் யாரும் ஃபீல்டிங் செட் பண்ணுவார்களா- இங்கிலாந்தில் வைரலாகும் புகைப்படம்..!

இங்கிலாந்தின் கழக மட்டப் போட்டிகளில் ஒன்றான யோர்க்ஷையர் மற்றும் ஹம்ஷைர் பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி தோல்வியற்ற நிலையில் (Draw) நிறைவுக்கு வந்துள்ளது.

 யோர்க்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு இறுதி 7 ஓவர்கள் இருக்கின்றபோது இறுதிி விக்கெட் இணைப்பாட்டமாக ஹம்ஷைர் அணியின் கையில் அப்பூட் மற்றும் பிரட் வீல் ஆகியோர் இணைந்தனர்.

 

இவர்களது விக்கட்டை எப்படியாவது வீழ்த்தி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக, யோர்க்ஷைர் அணியின் அத்தனை (10) பீல்டர்களும் துடுப்பாட்ட வீரர்களுக்கு மிக நெருக்கமாக, அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக களத்தடுப்பு வியூகம் அமைத்தனர்.

ஆயினும் அப்பூட் ,வீல் ஆகியர் விக்கட்டை விட்டுக் கொடுக்காமல் போட்டியை Draw செய்தமை குறிப்பிடத்தக்கது.

கையில் அப்பூட் 51 பந்துகளுக்கு 9 ஓட்டங்களையும், பிரட் வீல்  22 பந்துகளுக்கு ஓட்டம் எதுவும் பெறாதநிலையிலும் மிகப் பெரிய போராட்டத்திற்கு மத்தியில் போட்டியை Draw செய்ய உதவினர்.