இப்படியொரு கிரிக்கெட் கொண்டாட்டத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் ..! (வீடியோ இணைப்பு)

இப்படியொரு கிரிக்கெட் கொண்டாட்டத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் ..! (வீடியோ இணைப்பு)

கிரிக்கெட் அரங்கில் ஏராளமான கொண்ட்டாட்டங்களை நாம் வாழ்நாளில் பார்த்திருக்கின்றோம், ஆனால் இந்த கொண்டாட்டம் என்பது சமூக வலைத்தளங்களில் அதிகம் கொண்டாடப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

யூரோப்பியன் லீக் கிரிக்கெட் தொடரில் தும்பிரிட்ஜ் வெல்ஸ் , ட்ரெஸ் அணிகளுக்கிடையிலான போட்டியிலேயே இந்த சம்பவம் பதிவானது.

வாஹித் அப்துல் எட்டு ரன்களில் மார்கஸ் ஓ’ரியார்டனை கிளீன் பவுல்டு செய்து, ஃபோன் செய்யும் செயலை (phone-call celebration) செயல்படுத்தி ஷூவை கழற்றி விக்கெட்டைக் கொண்டாடினார்.

அதன்பின்னர் அவரோடு மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த வில்லியம்ஸ் இரண்டு பெரிய சிக்ஸர்களை அடித்த பிறகு குறித்த செயலுக்கு பழிதீர்க்க போன் செய்து இதே மாதிரியான கொண்டாட்டத்தை செய்தார்.

வில்லியம்ஸ் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு.