இப்படி ஒரு பந்தை உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்- சிகா பாண்டேயின் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்துவீச்சு..!

இப்படி ஒரு பந்தை உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்- சிகா பாண்டேயின் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்துவீச்சு..!

அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணிக்கு அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டாவது ட்வென்டி ட்வென்டி போட்டி நிறைவுக்கு வந்துள்ளது .

முதலாவது போட்டியில் இந்தியா மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, மழை குறுக்கீடு காரணமாக போட்டி  போட்டி கைவிடப்பட்டது .

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் மிகச் சிறப்பான ஒரு வெற்றியை ஆஸ்திரேலிய மகளிர் அணி பெற்றுக்கொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து போட்டியில் இலகுவான வெற்றியை தமதாக்கியது.

 இந்த போட்டியில் பாண்டே என்ற இந்தியாவின் மகளிர் வீராங்கனை வீசிய பந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரும் ஆச்சரியத்திற்குரிய பந்தாக மாறியிருக்கிறது.

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்து என வர்ணிக்கப்படுகின்ற வகையில் இந்த பந்துவீச்சு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

6 வது ஸ்டம்பில் வீசப்பட்ட பந்து மிடில் ஸ்டம்பை தகர்த்த ஒரு அதிசய சம்பவம் இங்கே பதிவானது.

வீடியோவை பாருங்கள் மிரண்டு போவீர்கள் ???