இரண்டாவது T20 போட்டியில் அபார வெற்றியைப் பெற்றது இலங்கை அணி..!
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2 வது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் மிகச் சிறப்பான பந்துவீச்சு, துடுப்பாட்ட துணையோடு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி இலங்கைக்கு கிடைத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்கள் மட்டுமேதான் பெற்றுக் கொண்டது.
இலங்கை பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர், பதிலுக்கு 133 எனும் இலக்குடன் ஆடிய இலங்கை அணிக்கு தனஞ்சய டீ சில்வா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும், இலங்கையின் புதிய கண்டுபிடிப்பாக புகழப்படும் சாமிக கருணாரத்ன 6 பந்துகளில் 12 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, இலங்கை அணி போராடி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது.
இன்று இந்தியா சார்பில் 4 வீரர்களுக்கு அறிமுகம் கொடுக்கப்பட்டது. முதல் போட்டியில் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.
தொடரை தீர்மானிக்கல்ல மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்.