இரண்டாவது தடவையாகவும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட இலங்கை-இந்திய தொடர், புதிய திகதிகள் அறிவிப்பு..!
இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய ,மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.
ஆயினும்கூட இலங்கை கிரிக்கெட் அணிக்குள் ஏற்பட்டிருக்கும் கொரோனா நோய் தொற்று காரணமாக போட்டிகள் பிற்போடப்பட்டது.
இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்ட் பிளவர், அதேபோன்று பயிற்சியாளர் குழாமில் இருக்கும் இன்னுமொருவருக்கு நேற்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொழும்பில் பயிற்சிகளில் ஈடுபட்டுவந்த வீீரர் சந்துன் வீரக்கொடிக்கும் இன்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த தொடர் மிகப் பெரும் சிக்கல் நிலையை சந்தித்திருக்கிறது.
ஆதலால் மீண்டும் ஒரு தடவை தொடர் பின்தள்ளப்படுவதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.
18ஆம் திகதி, 20 ஆம் திகதி, 22ஆம் திகதி ஆகிய தினங்களில் ஒரு நாள் தொடரும் 25, 27, 29 ஆகிய தேதிகளில் twenty20 தொடரும் இடம்பெறும் என்று மீண்டும் ஒரு தடவை அறிவிக்கப்பட்டிருக்கிறது.