இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை கால்பந்து உலகக்கிண்ணம்- FIFA ஆலோசனை..!

சர்வதேச கால்பந்து ரசிகர்களின் பெருவிருப்புக்குரிய தொடரான கால்பந்து உலகக் கிண்ண தொடரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்துவதற்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் ஆலோசனை நடத்துவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒரு தடவை ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கிடையிலான கால்பந்து உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அதனை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்துவதற்கு ஆலோசிப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

 

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பண்டினோ கருத்து தெரிவிக்கையில், இது சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கு நெருக்கடிக்குரிய விஷயம் அல்ல எனும் கருத்தையும் வெளியிட்டுள்ளார். ஆயினும் ஒட்டுமொத்தமான கால்பந்து சம்மேளனத்ததும் ஒப்புதலின் பின்னரே இது தொடர்பான இறுதி தீர்மானத்து வரமுடியும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த கால்பந்து உலகக் கிண்ண போட்டிகளில் 2022 ம் ஆண்டு கட்டாரில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.