இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள இந்திய அணி- வெளிவரும் உள்ளக தகவல்கள் ..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி நாளை ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே மூன்று போட்டிகள் நிறைவுக்கு வந்த நிலையில், இரு அணிகளும் ஒவ்வொரு வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
நாளை ஆரம்பமாகும் போட்டி தொடரை தீர்மானிக்கவல்ல ஆட்டமாக இருக்கும் என நம்பப்படுகிறது, கடந்த 3 வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் இந்திய அணியில் பலவித மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர், அணியில் இருந்து ரஹானே நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
ஆனாலும் நாளைய போட்டியில் ரஹானே விளையாடுவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன, குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
மற்றும்படி பெரிதான மாற்றங்கள் எதுவும் இந்திய அணியில் இடம்பெறவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஓவல் மைதானம் 4ம் ,5 ம் நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகத்தை கொடுக்கும் என்பதால் அஸ்வின் இணைக்கப்படுவது என்பது நூறுவீதம் உறுதியாகி இருக்கிறது.
எதிர்பார்கப்படும் அணி விபரம்.
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சிட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி (C), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பான்ட், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா