இரு அணிகள் -ஒரே விமானம் -இங்கிலாந்து நோக்கி புறப்பட்ட இந்தியர்கள் …!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவில் ஈடுபட்டிருக்கும் இந்திய ஆடவர் அணியும் இந்திய மகளிர் அணியும் இன்று அதிகாலை வேளையில் இங்கிலாந்துகான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியும் விராட்கோலி தலைமையிலான இந்திய ஆடவர் அணியும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வரும் 18ஆம் திகதி நியூஸிலாந்து அணியை சந்திக்கிறது.

அதற்கு பின்னர் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

 

மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி வருகின்ற 16ஆம் திகதி தங்களுக்கான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு அதற்கு பின்னர் 3 ஒருநாள் போட்டிகள் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மண்ணில் விளையாடவுள்ளது.

இந்திய மகளிர் அணி சுற்றுப்பயணம் வருகின்ற ஜூலை மாதம் 15ம் திகதி நிறைவுக்கு வந்தாலும், இந்திய அணி அங்கு நீண்ட நாட்கள் போட்டிகளில் கலந்து கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.