இர்பான் பதானின் இந்திய உலக கிண்ண அணி..!

இர்பான் பதானின் இந்திய உலக கிண்ண அணி..!

T20 உலகக் கோப்பைக்கான இந்திய உத்தேச XI அணியை இர்பான் பதான் கணித்து வெளியிட்டுள்ளார். அவரது அணியில் இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் இடம்பெறவில்லை.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கே.எல்.ராகுல் ,ரோஹித் ஷர்மாவை பரிந்துரை செய்துள்ளார் . ஒன்டவுன் இடம் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள்.

இவரின் தேர்வில் ரிஷப் பந்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை அணிக்குள் கொண்டுவந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா ஆகியோர் உள்ளனர்.

ஸ்பின்னராக யுஜ்வேந்திர சஹலை சேர்க்க வேண்டும் என பதான் பரிந்துரை செய்துள்ளார்.