இறுதிப் பந்தில் போட்டியை வெல்வதில் சாதனையை நிலைநாட்டிய சென்னை அணி- எத்தனை தடவைகள் தெரியுமா ?

இறுதிப் பந்தில் போட்டியை வெல்வதில் சாதனையை நிலைநாட்டிய சென்னை அணி- எத்தனை தடவைகள் தெரியுமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நிறைவுக்கு வந்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

172 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, இறுதி பந்தில் வெற்றி பெற்றது, 19வது ஓவரில் ஜடேஜாவின்  வான வேடிக்கை இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இறுதி பந்துவீச்சில் சென்னை அணியால் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சாதனையை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது. IPL வரலாற்றில் அதிக தடவைகள் இறுதி பந்து வீச்சில் வெற்றியைத் தனதாக்கிய அணி என்ற சாதனையை சென்னை பெற்றது.

 

சென்னை அணி இவ்வாறு இறுதிப்பந்தில் வெற்றி பெறுவது 7 வது தடவையாகும், சென்னைக்கு அடுத்த நிலையில் மும்பை ஆறு தடவைகள் இறுதிப் பந்தில் வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு தடவைகள் வெற்றியை பெற்றிருக்கிறது.

சென்னை அணி ஐபிஎல் இல் தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு விருந்து படைப்பதில் வல்லவர்களாக திகழ்கிறார்கள்.