இறுதிப் போட்டிக்கு முன்னேறிய திருக்கோணமலை டைனமிக் கழகம்..!

திருகோணமலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு கழகத்தின் 2வது தெரிவு (2nd playing Xl ) அணி தன்னுடன் போட்டி போட்ட அனைத்து கழகங்களுடனும் போட்டியிட்டு இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

(டைனமிக் கழகத்தின் 1வது லெவன் டிவிஷன் 2 விளையாடுவதால் அவர்களால் பிரிவு 3 விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.)

குறித்த தொடரில் நேற்றைய நாளில் இடம்பெற்ற  அரையிறுதி போட்டியில் வெற்றிவாகை சூடி இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

•டைனமிக் ?? ?? இந்து ??

•டைனமிக் Toss வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது?

•டைனமிக் ?? 47.5 ஓவர்களில் 214/10

?ஜே.மயூரன் 46 (42)
?S சங்கர் 28 (47)

?திஜாகரன் 6 ஓவர்கள் | 26 | 03
?சியாலன் 8.5 ஓவர்கள் | 42 | 02

•இந்து ?? 47.5 ஓவர்களில் 176/10

?ரிஷி 51(71)
?மனோராஜ் 39(65)

?ஜனா 9 ஓவர்கள் | 28 | 03
?கோன்ஸ் 8.5 ஓவர்கள் | 36 | 03
?கேசவக்ஷன் 10 ஓவர்கள் | 44 | 03

போட்டியில் 38 ஓட்டங்களால் வெற்றிபெற்ற டைனமிக் கழகம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக ஜானகேசன் தேர்வானார். ?

டைனமிக் கழகம் என்பது திருகோணமலையில் உள்ள ஒரே ஒரு div 1 கழகமாகும். இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட சிறந்த அணிகள் மட்டும் பங்கு பெறும் SARAH கிண்ணம் என அழைக்கப்படும் மாபெரும் போட்டியில் பங்குபற்றிய பெருமையும் எமது கழகத்தையே சாரும்.

திருகோணமலை மண்ணில் பல சாதனைகளை தம் வசம் வைத்திருந்த ஒரு சில கழகங்களில் டைனமிக் முக்கியமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடினப்பந்தை பொருத்தவரையில் மற்றைய கழகங்களை போன்று டைனமிக் கழகத்திற்கு தனிப்பட்ட மைதான வசதி கிடையாது. தங்களின் வீரர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியுமே டைனமிக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சிக்கு காரணம்.