இறுதிப் போட்டியும் -இந்தியாவும் , அவுஸ்ரேலியாவிடம் தங்கத்தை கோட்டைவிட்ட இந்திய மகளிர் அணி…!

இங்கிலாந்தின் பர்மிங்காம் இல் இடம்பெற்ற வருகின்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிருக்கான கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதி போட்டியில் அவுஸ்ரேலிய அணி சம்பியனாகியது.

ஒருநாள் மற்றும் T20 உலக சாம்பியன்களான அவுஸ்ரேலிய அணி இன்று இந்தியாவை சந்தித்தது, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 161 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

162 என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணிக்கு ஆரம்ப வீராங்கனைகளை விரைவாகவே ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவி ஹர்மன்பிரீட் கவூர் மற்றும் ஜெமிமா இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்தனர், 3-வது விக்கெட் 118 ஓட்டங்கள் பெற்றபோதே சரிக்கட்டது, இருப்பினும் இந்தியாவின் இறுதி 8 விக்கெட்டுகளும் 34 ஓட்டங்களுக்குள் பறிக்கப்பட்ட நிலையில் இந்தியா 9 ஓட்டங்களால் தங்கப்பதக்கத்தை தவறவிட்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டு மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இந்த மாதிரியான ஒரு தவறு செய்தே இந்தியா உலகக் கிண்ணத்தை இழந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .

2017ஆம் ஆண்டு மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் இருந்தும், இறுதி 7 விக்கெட்டுகளையும் 28 ஓட்டங்களுக்கு இழந்தது, இதனால் இதேபோன்று 9 ஓட்டங்களால் உலக கிண்ணத்தை இந்தியா இழந்ததைப்போன்று இந்த காமன்வெல்த் போட்டிகளிலும் வெல்வதற்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டிகள் ,T20 போட்டிகள் எல்லாவற்றிலும் உலக சாம்பியனான ஆஸ்திரேலியா இப்போது காமன்வெல்த் போட்டிகளிலும் சாம்பியன் மகுடத்தை தனதாக்கி இருக்கிறது, வாழ்த்துக்கள் ?

?? 161/8 20 ov (மூனி 61 லானிங் 36 ரேணுகா 2/25 ராணா 2/38)

?? 152 19.3 ov (ஹர்மன்ப்ரீத் 65 ஜெமிமா 33 கார்ட்னர் 3/16 ஷட் 2/27)

#AUSvIND #B2022 #CWG2022