பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி போட்டி நாளை டாக்கா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் பலவித மாற்றங்களுடன் அணி களமிறங்கவுள்ளதாக துடுப்பாட்ட பயிற்சியாளர் ஆண்டி பிளவர் அறிவித்துள்ளார்.
பங்களாதேஷுடனான கிரிக்கெட் தொடரில், வரலாற்றில் முதல் முறையாக இலங்கை அணி தொடரை இழந்திருக்கிறது. இந்தநிலையில் நாளை விளையாடவுள்ள இறுதி ஒருநாள் போட்டியில் அணியில் பலவித மாற்றங்கள் நிகழும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக விக்கெட் காப்பாளராக குசல் பெரேராவுக்கு பதிலாக டிக்வெல்லவே விளையாடவிருப்பதாகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
முதலிரு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவி தொடரை 2-0 என்று இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.