இறுதி ஓவரில் வெற்றிக்கு 35 ஓட்டங்கள் தேவை 6 சிக்சர்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த அயர்லாந்து கிரிக்கெட் நட்சத்திரம்..!

இறுதி ஓவரில் வெற்றிக்கு 35 ஓட்டங்கள் தேவை எனும் நிலையில்  6 சிக்சர்கள் விளாசி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த அயர்லாந்து கிரிக்கெட் நட்சத்திரம் தொடர்பாக செய்திகள் வெளிவருகிறது.

கிரிக்கட் உலகில் கடந்த வியாழக்கிழமை, வடக்கு ஐரிஷ் கிரிக்கெட் கிளப் கிரெகாக் எல்விஎஸ் ட்வென்டி 20 கிண்ண தொடரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று பதிவானது.

 ஐரிஷ் கிரிக்கெட் கிளப் போட்டியொன்றில் பாலிமெனாவை வீழ்த்த இறுதி ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது, அப்படியான நிலமையில் ஜான் கிளாஸ் எனும் வீர்ர் ஆறு சிக்ஸர்களை அடித்து தன் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துள்ளார்.

 

 இறுதி ஓவர் தொடங்கும் போது பதில்  கேப்டனாக இருந்த ஜான் கிளாஸ் 51 ரன்களில் களத்தில் இருந்தார். வெற்றிக்கு 35 ஓட்டங்கள் தேவைப்பட்டன, இறுதி ஓவரின் ஒவ்வொரு பந்தையும் சிக்சர்களாக்கி, ஆட்டமிழக்காத 87 ரன்களை பெற்று அதிர்ச்சி தரும் விதத்தில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

இதற்கிடையில், முதல் இன்னிங்சில் ஜான் கிளாஸின் மூத்த சகோதரர் சாம் ஹாட் ரிக் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.