இறுதி ஓவரில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுக்கள், ஒரு ரன் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற பிரேசில்..!

இறுதி ஓவரில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுக்கள், ஒரு ரன் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற பிரேசில்..!

மகளிருக்கான உலக டுவென்டி டுவென்டி போட்டிக்கான அமெரிக்க பிராந்தியத்தின் தகுதிகாண் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டிகளில் பிரேசில் மற்றும் கனேடிய அணிகளுக்கிடையிலான போட்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விறுவிறுப்பான ஆட்டமாக பதிவு செய்யப்பட்டது.

மழை காரணமாக 16 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரேசில் அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

47 என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய கனேடிய அணி இறுதி ஓவரில் அவர்களுடைய வெற்றிக்கு ஐந்து விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்கின்றபோது 3 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இந்த நிலையில் கனேடிய அணி எவரும் எதிர்பாராத விதமாக இறுதி ஓவரில் 5 விக்கெட்டுகளை 5 பந்துகளில் இழந்து ஒரு ஓட்டத்தலான தோல்வியைத் தழுவிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியம் மிகு போட்டியின் வீடியோவை கீழே பாருங்கள் ???