இலங்கைக்கு எதிராக தேவைப்படும் இரண்டு வெற்றிகள்- உலக சாதனைக்கு காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி..!

இலங்கைக்கு எதிராக தேவைப்படும் இரண்டு வெற்றிகள்- உலக சாதனைக்கு காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான தொடர் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

3 ஒருநாள் போட்டிகள் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி களம் காணவுள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக பல சிக்கல்களையும், நெருக்கடிகளையும் தொடர்ச்சியான தோல்விகளையும் சந்தித்து வரும் நிலையில் மனோரீதியாக வலுவிழந்து, பலமிழந்து அணியாக இலங்கை அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உடனான தொடரில் இந்திய அணிக்கு 2 வெற்றிகள் கிடைக்குமாக இருந்தால், இந்திய அணி  உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிவிடும்.

குறித்த ஒரு அணிக்கு எதிராக அதிக ஒருநாள் போட்டி வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட வரலாற்று சாதனை இந்திய அணி வசமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரைக்கும் அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் (92) பெற்றுக் கொண்ட சாதனையைப் படைத்திருக்கிறது .

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் வரவிருக்கும் தொடரில் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டு வெற்றி பெறுகின்ற பட்சத்தில் அவுஸ்திரேலிய அணியைக் கடந்து அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட அணியாக தன்னை நிலைநாட்டிக் கொள்ளும் .

இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் குறித்த ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட அணி என்கின்ற பெருமையை உலக சாதனை இந்தியா படைக்கவும் சந்தர்ப்பம் உள்ளமை முக்கியமானது.

92 – அவுஸ்திரேலிய vs நியூசிலாந்து
92 – பாாாாகிஸ்தான் vs இலங்கை
91 – இந்தியா vs இலங்கை*
84 – அவுஸ்திரேலியா vs இங்கிலாந்து
80 – அவுஸ்திரேலியா vs இந்தியா