முஷ்பிகுர் ரஹீம் ??? 5000 டெஸ்ட் ரன்களைக் கடந்த முதல் வங்கதேச வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போதே பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் இந்த சாதனையை படைத்துள்ளார்.
பங்களாதேஷ் அணிக்காக முதல் வீரராக 5000 ரன்களை கடந்தவர் என்பதே அந்த மைல்கல் சாதனையாகும்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 397 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, பங்களதேஷ் தமது இன்னிங்சை ஆடி வருகின்றது.