இலங்கைக்கு எதிராக வோர்னர் படைத்த புதிய சாதனை..!

அவுஸ்ரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இன்று டி20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆர் பிரேமதாசா மைதானத்தில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது அந்த சாதனையை வோர்னர் படைத்தார்.

இன்று, டேவிட் வோர்னர் அதே எதிரணி அணிக்கு எதிராக தொடர்ந்து ஐந்து டி20 போட்டிகளில் அரை சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆனார்.

இலங்கைக்கு எதிரான கடைசி ஐந்து டி20 போட்டிகளில் வோர்னரின் ஸ்கோர் பின்வருமாறு.

2022 – 58 *

2021 – 65

2019 – 57 *

2019 – 60 *

2019 – 100 *

வோர்னரைத் தவிர, நான்கு டி20 இன்னிங்ஸ்களில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இதற்கு முன்பு இதேபோன்று ஒரே எதிரணிகளுக்கு எதிராக அரை சதம் அடித்துள்ளனர்.

விராட் கோலி டி20யில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 4 தடவை 50+ ஸ்கோரை அடித்துள்ளார்.

பால் ஸ்டெர்லிங் ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20யில் 50+ ஸ்கோரை தொடர்ந்து 4 முறை பெற்றுள்ளார்.

அதேபோன்று ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் பின்ச் மற்றும் வோர்னர் ஆகியோர் இலங்கைக்கு எதிராக இன்று சத இணைப்பாட்டம் புரிந்தனர்.  இருவரும் ஐந்தாவது தடவையாக சத இணைப்பாட்டம் புரிந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 128 ஓட்டங்கள் எண்ணிக்கையை ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 14 ஓவர்களில் கடந்து முதலாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

சேஸிங் செய்யும் போது டி20 போட்டிகளில் இலங்கைக்கு எதிரான அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப்கள்.

134* – டேவிட் வார்னர் & ஆரோன் பின்ச் ?? கொழும்பில் (RPS), 2022 *

121* – குயின்டன் டி காக் & ரீசா ஹென்ட்ரிக்ஸ் ?? கொழும்பில் (RPS), 2022

#SLvAUS

டி20 போட்டிகளில் அதிக சத இணைப்பாட்டம் ?

6 – பாபர்/ரிஸ்வான்
5 – ரோஹித்/ராகுல்
4 – பிஞ்ச்/வார்னர்*
4 – ரோஹித்/தவான்
4 – கப்டில்/கேன் வில்லியம்சன்

#AUSvsSL

YouTube காணொளிகளுக்கு ?

கோலி instragram ல் படைத்த சாதனை..!