இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண சாதனையை சமன் செய்த நியூசிலாந்து அணி ..!

இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண சாதனையை சமன் செய்த நியூசிலாந்து அணி ..!

பங்களாதேஸ் கிரிகட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் நியூஸிலாந்து அணிக்கும், வங்கதேச அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று ஆரம்பமானது.

டாக்காவில் இடம்பெற்றுவரும் முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, வங்கதேச அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது 60 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி, 60 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து கிரிக்கெட் சரித்திரத்தில் அவர்களுடைய மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை 60 ஆக காணப்படுகிறது.

2014 ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணப் போட்டிகளின் போது ரங்கன ஹேரத்தின் சுழலில்  சிக்குண்ட நியூஸிலாந்து அணி சட்டோகிராம் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

அவர்களுடைய T20 கிரிக்கெட் வரலாற்றில் பெற்றுக்கொண்ட குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை எனும் மோசமான சாதனையை பங்களாதேஷ் அணிக்கெதிராக இன்று நியூஸிலாந்து சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

New Zealand’s batting collapse:

1/1
7/2
8/3
9/4
43/5
45/6
49/7
52/8
55/9
60/10

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 15 ஓவர்களில் வெறுமனே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் 7 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.