இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி- மக்ஸ்வெல் வாணவேடிக்கை..!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி- மக்ஸ்வெல் வாணவேடிக்கை..!

கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை அவுஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகளால் வீழ்த்தியது.

Toss வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டமாக குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களையும், பதம் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 55 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஷ்டன் அகர் மற்றும் மார்னஸ் லபுஸ்சாக்னே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 301 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி, கனமழை காரணமாக திடீரென 44 ஓவர்களில் 282 ஓட்டங்கள் பெறவேண்டும் என இலக்கு நிரணயிக்கப்பட்டது.

முன்னணி வீரரும், ஆஸ்திரேலியாவின் சாம்பியனுமான கிளென் மேக்ஸ்வெல் இலங்கைக்கு தலையிடி கொடுத்து ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களும், ஸ்டீவ் ஸ்மித் (53), ஆரோன் பின்ச் (44), மார்கஸ் ஸ்டோனிஸ் (44) எடுத்தனர்.

வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீர்ர் துனித் வெல்லலாகே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை கிளென் மேக்ஸ்வெல் பெற்றார். போட்டியில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றது.