இலங்கையர்களைக் கவர்ந்த ஹார்திக் பாண்டியா ,தேசிய கீதம் இசைத்ததோடு  துடுப்பும் பரிசளித்தார்..!

இலங்கையர்களைக் கவர்ந்த ஹார்திக் பாண்டியா ,தேசிய கீதம் இசைத்ததோடு  துடுப்பும் பரிசளித்தார்..!

இலஙலகை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி  நிறைவுக்கு வந்துள்ளது .

முதலாவது போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஹார்திக் பாண்டியா பேசுபொருளாக மாறியுள்ளார்.

 

 சொல்லும்படியாக அவரது துடுப்பாட்டம் அமையாவிட்டாலும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார் ,ஆனாலும் இலங்கை தொடரில் அவருடைய துடுப்பாட்டம், பந்துவீச்சு ,களத்தடுப்பு என்று சகல துறைகளிலும் பாண்டியா பேசும் படியாக இல்லை எனும் வருத்தம் இந்தியர்களுக்கு இருந்துகொண்டிருக்கிறது .

ஆயினும் இலங்கை ரசிகர்கள் ஹார்திக் பாண்டியாவை விலை சமூக வலைத்தளங்களில் கொண்டாடுகிறார்கள் .

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது, பாண்டியா தேசிய கீதத்தை வாயசைத்து பாடியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இது மாத்திரமல்லாமல் இலங்கையின் வளர்ந்து வரும் இளம் சகலதுறை ஆட்டக்காரர் சாமிக  கருணாரத்னவிற்கு போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் ஹார்திக் பாண்டியா Bat ஒன்றை அன்பளிப்பாக வழங்கி இருந்தார் என்பதும் இங்கே முக்கியமான விடயம்.

ஆக மொத்தத்தில் இன்று இலங்கை ரசிகர்களால் ஹர்திக் பாண்டியா கொண்டாடப்படுகிறார் என்பதே முக்கியமானது.