இலங்கையர்கள் இதயம் வென்ற ஷிகார் தவான் ..!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
ஒரு நாள் தொடரை இந்திய அணி 2_1 எனவும், T20 தொடரை இலங்கை 2-1 எனவும் வெற்றிகொண்டன.
கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தவான் தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பான ஒரு தொடரை இலங்கையில் விளையாடியதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய பாராட்டுக்களையும் நன்றிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இது மாத்திரமல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தவான், இலங்கையுடனான T20 போட்டிகளில் தொடரை இழந்தாலுகூட தோல்விக்குப் பின்னர் இலங்கையின் இளம் வீரர்களுடன் கிரிக்கெட் சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டமை சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் அளவிில் பாராட்டப்படுகிறது.
தன்னுடைய அனுபவத்தை இலங்கையின் இளம் வீரர்களுக்கு பகிர்ந்து தவான் ஆலோசனை கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்திருக்கின்றன.
தவானின் இந்த நல்ல குணாதிசயம் ரசிகர்களால் வெகுவாக புகழப்படுகிறது, இந்தியா தொடரை இழந்தாலும் தவான் இலங்கையர்கள் இதயத்தை தவான் வென்றிக்கிறார்.