இலங்கையின் ஆசியக் கிண்ண வெற்றிக்கு காரணமான நாமல்…!

இலங்கையின் ஆசியக் கிண்ண வெற்றிக்கு காரணமான நாமல்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றியின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

இரண்டரை வருடங்களாக நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவையின் பெறுபேறுகள் தற்போது கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலின்றி திறமையானவர்களுக்கு விளையாட்டை முன்னெடுப்பதில் நாமல் ராஜபக்ஷ பெரும் பங்காற்றினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நாமல் ராஜபக்ஷவுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது மிகவும் பொருத்தமானது என்றும் மதுர விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

via -டெய்லிசிலோன்

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் ?