இலங்கையின் இந்திய சுற்றுலா- மாற்றியமைக்கப்பட்ட புதிய அட்டவணையை வெளியிட்டது BCCI ..!
இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணையை BCCI வெளியிட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட T20 தொடர் வருகின்ற பிப்ரவரி 24 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது, அதன் பின்னர் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
முன்னதாக டெஸ்ட் போட்டிகள் இடம்பெறும் என்று அட்டவணை வெளியிட்டாலும், ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் கோரிக்கையை ஏற்று முதலில் T20 போட்டிகள் இடம்பெறும் வண்ணம் அட்டவணை இப்போது மாற்றப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தொடரை அடுத்து நேரடியாக இந்தியா சென்று T20 போட்டிகளில் ஆடுவது Bio bubble சிக்கல்களை தவிர்க்க முடியும் என்பதனால் அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24 , 26 , 27 ம் திகதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளும், அதன்பின்னர் மார்ச் 4 மற்றும் 12 ம் திகதிகளில் 2 டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
அட்டவணை ?