இலங்கையின் இறுதி நம்பிக்கையும் பறிபோனது- குதிரையேற்றமும் தோல்வி..!

இலங்கையின் இறுதி நம்பிக்கையும் பறிபோனது- குதிரையேற்றமும் தோல்வி..!

இலங்கை சார்பில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறினார்.

இன்று பகல் குதிரையேற்றப் போட்டியில் மெதில்டா கார்ல்ஸன் இன்று பங்கேற்றிருந்தார். ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை கார்ல்ஸன் பெற்றிருந்தார்.

142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன் ஒலிம்பிக்கில் களமிறங்கும் இலங்கைப் பெண்..!

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த ஏனைய வீரர்கள் தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை பெற தவறியிருந்தனர்.

இந்த நிலையில், இறுதியாக மெதில்டா கார்ல்ஸன் மீது இலங்கை ஒலிம்பிக் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

எனினும், குதிரையேற்ற போட்டியில் கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே தோல்வியை தழுவி வெளியேறி இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்ததுடன், இலங்கையின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்து போனது.

1948 இல் 400 ம் தடைதாண்டலில் டங்கன் வைட் 2000 ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் 2000 ம் சுசந்திக்க ஜெயசிங்க பதக்கம் பெற்றதற்கு பின்னர் இலங்கையர்களால் ஒலிம்பிக் பதக்கம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.