கண்டியில் நடைபெறவுள்ள SLC T20 லீக்கில் பங்கேற்கும் மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தகவல்களின்படி, சசிந்து கொலம்பகே, முகமது ஷிராஸ் மற்றும் நிமேஷ் விமுக்தி ஆகிய வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர்.
மீதமுள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகள் நான்கு அணிகள் பங்கேற்கும் SLC T20 லீக் போட்டிக்காக கண்டிக்கு புறப்படுவார்கள் என அறியவருகின்றது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) T20 T20 லீக் ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 22 வரை தொடரவுள்ளது.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச இந்த SLC T20 லீக் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, அவருக்கு முன்னர் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜூலை மாதம் கொழும்பில் நடந்த இந்தியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது ராஜபக்சவின் விரலில் காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.