“அணிக்கு வருவது சுலபம், அணியில் தொடர்ந்து நீடிப்பதற்கு நிறைய கடின உழைப்பு தேவை”
நிஷான் மதுஷ்காவின் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பில் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய 23 வயதான விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க நியூசிலாந்தில் வைத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கான அறிமுகத்தை மேற்கொண்டார் .
இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் பெறுமதியான 39 ஓட்டங்களை நிஷான் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் நிஷான் மதுஷ்கவின் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்ற நேர்காணல் ஒன்றின் போது சனத் ஜெயசூரிய மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது அணிக்குள் வருவது சுலபமானது நிலைப்பதற்கே கடுமையாய் உழைக்க வேண்டும் என்பதே சனத்தின் எச்சரிக்கையாகும்.
எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇