லங்கா பிரீமியர் லீக் 2022 ??? டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம்
“ஆம், அவர்கள் ஒத்திவைக்கக் கோரியுள்ளனர்,” என்று SLC ஆதாரம் உறுதிப்படுத்தியது.
“நாங்கள் விரைவில் ஒரு முடிவை எடுப்போம்.”
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) மூன்றாவது பதிப்பு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய நிதிக் கட்டுப்பாடுகள் குறித்து நிகழ்வு உரிமைதாரர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர் என SLC வட்டாரங்கள் தெரிவித்தன,
ஐந்து அணிகளுள் ஒன்றான Galle Gladiators, திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாத்த்தில் போட்டியை நடத்தினால், போட்டியிலிருந்து விலகுவது குறித்தும் பரிசீலித்து வருகிறது என சண்டே டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.