டிடிஎஸ் என்று அழைக்கப்படும் இலங்கையின் அனுபவமிக்க டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் தனஞ்சய டி சில்வா, இலங்கை உலகக் கோப்பை அணியின் முதல் -15 வீரர்களிடமிருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்று இலங்கை கிரிக்கெட் (SLC) வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அவர் டி20 வடிவத்திற்கு பொருத்தமான ஒரு பேட்ஸ்மேன் அல்ல என்பதை புரிந்துகொள்வதற்காக அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
T20 அணிகளில் மாற்றம் செய்யும் இறுதி திகதி அக்டோபர் 10
முக்கியமான காரணங்களுக்காக, T20இறுதி அணியை மாற்றம் செய்து அறிவிப்பதற்கான இறுதி திகதியாக செப்டம்பர் 10 ,சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அறிவித்திருக்கிறது.
இலங்கை 15 பேர் கொண்ட அணியை இலங்கை ஏற்கனவே பெயரிட்டுள்ளது. இறுதி சேர்க்கைகளில் அக்டோபர் 10 க்கு முன் மாற்றங்களைச் செய்யலாம் என்பது முக்கிய விடயம்.
போட்டி அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும்.
இலங்கையின் ஆரம்ப 15 பேர் கொண்ட அணி:
தசுன் ஷானக (கேப்டன்), தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ச, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர, பிரவீன் ஜெயவிக்ரம, மஹீஷ் தீக்ஷ்சன, குசல் பெரேரா*, லஹிரு மதுசங்க *
*-உபாதைக்குள்ளான வீரர்கள்.
மேலதிக பயண இருப்பு (Reserve)
லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ, அகில தனஞ்சய மற்றும் புலின தரங்க
கூடுதல் வீரர்கள் (5):
மினோத் பானுக, ரமேஷ் மெண்டிஸ், அஷேன் பண்டாரா, பத்தும் நிசங்க மற்றும் லக்ஷன் சண்தகன்
மேலே உள்ள மேலதிக வீரர்கள் பட்டியலில், பேட் செய்யக்கூடிய குறைந்தது மூன்று வீரர்கள் உள்ளனர்: மினோத் பானுக, பத்தும் நிசங்க மற்றும் அஷேன் பண்டார.
தனஞ்சயவுக்கு பதிலாக யாரை மாற்றுவது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் அநேகமாக இறுதி அணியில் இருக்க மாட்டார், என்று SLC தகவல்கள் மேலும் உறுதிப்படுத்தியது.
எப்படியிருந்தாலும், காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர், ஆல்-ரவுண்டர் லஹிரு மதுஷங்கவுக்கு பதிலாக மினோத் பானுகவை சேர்ப்பது உறுதியாகியுள்ளது, ஆனால் தனஞ்சயவின் இடத்தை யார் நிரப்புவது என்பது உறுதியாகவில்லை.
முந்தைய தென்னாப்பிரிக்கா டி 20 சர்வதேச தொடரின் போது, இலங்கை அணி 3-0 என தொடரை இழந்தது.
“தனஞ்சயவின் மோசமான அர்ப்பணிப்பும் கவலைக்குரிய விஷயமாக நோக்கப்பட்டது. இலங்கையின் இளம் அணியின் வளர்ச்சியையும், இலங்கை அணியின் ஒருமைப்பாட்டையும் குழப்புவதற்காக இலங்கை அணிக்கு வெளியில் ஒரு சில குழுக்கள், சிரேஷ்ட வீரர்கள் செயற்படுவதாகவும் முன்னர் ஒரு தடவை குற்றம்சாட்டப்பட்டது.
அப்படியான குழுக்களோடு தொடர்புபட்டு ஆரோக்கியமற்ற நிலைப்பாட்டை தனஞ்செய டி சில்வா வழங்குவதாகவும் குற்றச்சாட்டும் அவர்மீது முன்வைக்கப்படுகிறது .
இவை எல்லாவற்றையும் காரணமாக வைத்தே தனஞ்செய டீ சில்வாவை நீக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இலங்கையில் இறுதியாக அறிவிக்கப்பட்ட ஒப்பந்த பட்டியலில் உச்சநிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீீரர் தனஞ்சய டீ செல்வா என்பதோடு, இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான உதவித் தலைவராகவும் தனஞ்சய டீ சில்வாவே செயல்படுவதும் இங்கே கவனத்தில் கொள்ளப்படதக்கது.