இலங்கையின் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த இருவருக்கு உபாதை, புதியவர்கள் இருவரை சேர்க்க நடவடிக்கை..!

இலங்கையின் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த இருவருக்கு உபாதை, புதியவர்கள் இருவரை சேர்க்க நடவடிக்கை..!

எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணியில் இருவர் உபாதையடைந்துள்ளனர்.

 ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, மற்றும் சகலதுறை வீரர் லஹிரு மதுஷங்க ஆகியொர் உபாதைக்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தசைப்பிடிப்பு காரணமாக குசல் ஜனித் பெரேரா அவதிப்படுவதாகவும் இவர் உலக கிண்ண போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை உருவாகும் எனவும் எமது விளையாட்டு. கொம் தளத்துக்கு செய்திகள் கிடைத்தன.

 

இது மாத்திரமல்லாமல் சகலதுறை ஆட்டக்காரர்  மதுஷங்க தோள்பட்டை உபாதையால் அவதிப்படுகிறார், இவரும் உலகக்கிண்ணத்தை தவற விடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் .

இவர்கள் இருவருக்கும் பதிலாக மாற்று வீரர்கள் 2 பேரை இணைக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

அறிவிக்கப்பட்ட இலங்கையின் உலக கிண்ண அணி.