இலங்கையின் உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் மேலும் ஐவருக்கு வாய்ப்பு …!

இலங்கையின் உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் மேலும் ஐவருக்கு வாய்ப்பு …!

உலக கிண்ண இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அணியில் இடம்பிடித்திருந்த ஒரு சில வீரர்கள் உபாதைகளால் அவதிப்படும் நிலையில் இலங்கை அணியில் மேலும் ஐவரை இணைக்கும் முயற்சிகளை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் முன்னெடுக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளின் பிரகாரம் செப்டம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் அணிகள் அறிவிக்க வேண்டும் ,அதேநேரத்தில் 15 பேர் கொண்ட பிரதான குழுவும், அதைவிடுத்து மூன்று அல்லது நான்கு வீரர்கள் மேலதிக வீரர்களாக அணி அறிவிக்கப்படலாம் என்பது விதிமுறை.

சர்வதேச கிரிக்கெட் பேரவை விதி முறையை இப்படி இருந்தாலும் இலங்கை கிரிக்கெட் அணியில் 15 பேர் கொண்ட வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்ற ஜனித் பெரேரா, சகலதுறை வீரர் லபிரு மதுசங்க ஆகியோர் உபாதைகளால் அவதி படுகின்றனர்.

இந்தநிலையில் மதுசங்கவிற்கு பதிலாக விக்கெட் காப்பாளர் மினோத் பானுகவை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்னும் சிலரைை இணைக்கவும் கற்சிகளை முன்னெடுப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன .

சுழற்பந்துவீச்சாளர் சந்தகன்,  அதேபோன்று பதும் நிஸங்க, அசேன் பன்டார ,ரமேஸ் மென்டிஸ் ,தனஞ்சய லக்ஷன் ஆகிய  யவீரர்களை அணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை அறிவித்த உலக கிண்ண அணி.

 

Previous articleஉலகக் கிண்ணத்திற்கு முன்னரே தீப்பொறியை கிளப்பும் இந்தியா- இங்கிலாந்து, அவுஸ்ரேலியாவுடன் மோதல்..!
Next articleஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்திற்கான புதுப்பிக்கப்பட்ட குழுக்கள் விபரம்…!